top of page

படித்து பயன் பெறுங்கள்!!!

"உணவே மருந்து" என்பது நமது முதன்மை மருத்துவம். அத்தகைய மருந்தை அலட்சிய படுத்துவது நாம் நமது குடும்பத்தில் இருக்கும்

மருத்துவர்களை அவமதிப்பது போலாகும். ஏனென்றால் நமது வீட்டில் உள்ள முதியவர்கள் அவர்களின் மருத்துவ வழிநெறிகளை நமக்கு கற்பிக்க முயற்சி செய்த போது அதை நாம் அலட்சியம் செய்த காரணத்தினால் தான் கொரோனா போன்ற கொடிய நோய்கள் உள்ளே நுழைந்தது.


நாம் தேடினாலும் கிடைக்காத சில மருத்துவ ரகசியங்கள் அவர்களிடம் உள்ளது என்பது நம் யாருக்கு தெரியும்? பல நாடுகளில் நமது பாரம்பரிய வழிமுறைகளை பின்பற்ற தொடங்கி வரும் நிலையில் நாமோ நமது அடையாளத்தை இழக்க உள்ளோம்.


காரணம்: உணவு என்பது அத்தியாவிசியம் அதை ஆடம்பரமாக்க முயற்சிக்கும் நாம் எங்கு செல்கிறோம் என்பதற்கு சான்றே இந்த தற்கொலை மற்றும் இளமரணங்கள் ஆகும். இன்னமும் உணவு இல்லாமல் இறக்கும் பல மக்கள் இருக்கதான் செய்கிறார்கள்… உணவை வீணாகாமல் நமது பசிக்கு மட்டும் உணவு உண்பதே சிறந்த பழக்கம்.


நமது தொழில்நுற்பம் மிகவும் ஆபத்து என்பது நமக்கு தெரியும் அதை எதிர்கொள்ள தேவையான நோய்எதிர்ப்பு சக்தியை நாம் எப்படி பெற முடியும் என்பதே பெரிய சவால். அதை பெற ஒரு சில வழிமுறைகளை நாம் கடைபிடித்தால் போதும்.


1. உடலுக்கு ஏற்றவாறு உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

2. சீரான உறக்கம் தேவை.

3. மூன்று முறை தவறாமல் நேரத்திற்கு உன்ன வேண்டும்.

4. ஆரோக்கியமற்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.

5. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்பதை தவிர்க்க வேண்டும்.

6. மனஅழுத்தம் தரக்குடிய சிந்தனையை தவிர்த்தல் நல்லது.


எப்படி உடல் பயிற்சி செய்ய வேண்டும்?


சீரான உடம்பை கொண்ட நபர்கள் அதிகம் உடல் பயிற்சி செய்ய தேவை இல்லை தினமும் 1 மணிநேரம் செய்தால் போதும்.


மிகவும் மெலிந்த உடலை கொண்ட நபர்கள் சில பயிற்சிகளை அரை மணிநேரம் செய்தால் போதும்


அதிகம் இடை கொண்ட நபர்கள் உடம்பை பராமரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும், தினமும் 3 வேலை உடல் பயிற்ச்சி செய்வது அவசியம் ஒரே சமயத்தில் மணிக்கணக்காய் பயிற்ச்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.


எப்படி உறங்க வேண்டும்?


நமது உடலை நாமே சரிசெய்ய உதவுவது தான் உறக்கம் அதை செய்ய தவறிவிட்டால் நமது வாழ்நாள் குறைந்துவிடும்.


ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம் நம்மை புற்றுநோய்க்கு கொண்டு சென்றுவிடும்.


மேலும் புற்றுநோயற்ற ஆரோகிய வாழ்விற்கு எங்கள் மருத்துவ குடிலுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


விவரங்கள் பெற உடனே வாட்சப் செய்யுங்கள் 79045 00905


31 views0 comments

Comments


bottom of page