top of page
Writer's pictureSri Guru Sidha Maruthuvar

ஏன் சித்த மருத்துவம் தேவை?

Updated: Dec 14, 2020

நாம் நமது பாரம்பரிய பரம்பரை சித்த மருத்துவம் செய்வதன் அவசியம் என்னவென்பதை உங்களுக்கு எளிமையாக என்னால் புரியவைக்க முடியும்.


தென் இந்திய மண்ணில் பிறந்த மக்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது அது எப்படி? அனைவரும் அறிந்த உண்மைதான் நமது பாரம்பரிய உணவு வகைகளால் வரும் எதிர்ப்பு சக்தியே. வீட்டை இயற்கை கிருமி நாசினி கொண்டு அன்றே நம் முன்னோர்கள் சுத்தம் செய்வதன் அர்த்தம் இன்று உங்களுக்கு கொரோன வைரஸ் மூலம் தெரிந்திருக்கலாம். இதை போன்ற கொடிய வைரஸ் அந்த கால கட்டத்திலும் உண்டு என்பதற்கு அறிவியல் சான்று உண்டு என்பதை நாம் அனைவரும் கூற கேட்டிருப்போம்… இப்போது உள்ள சிறந்த மருத்துவர்கள், சிறந்த தொழில்நுற்பம் மற்றும் மருந்துகள் அப்போது இல்லை ஆனாலும். நம் சித்தர்கள் மற்றும் அவர்கள் வழியை பின்பற்றி வந்த பாரம்பரிய மருத்துவர்கள் எப்படி நோய்களை விரட்டி அடித்திருக்கக்கூடும்?


இன்னும் சற்று சிந்தித்து பாருங்கள் நம் உடம்பில் காய்ச்சல் நோய் வந்தால் 20-க்கும். மேற்பட்ட நாட்கள் அந்த கிருமி தங்கியிருக்குமாம் நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி முற்றிலும் சோர்வடைந்த பிறகே தான் அந்த கிருமி இருப்பது நமக்கு உடல் உஷ்ணம் போன்ற அறிகுறிகளை காட்டும். அப்படி பட்ட சக்திவாய்ந்த கிருமியை இப்போது உள்ள மருத்துவ முறையில் ஓரிரு நாட்களில் விரட்டுகின்றோம்... அப்போது நீங்களே சிந்தித்து பாருங்கள் நமது உடலில் அந்த மருந்தானது எத்தகைய வீரியம் கொண்டு ஆற்றுகின்றது. கொரோனா துவக்க நாட்களில் மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று உங்களுக்கு தெரியும். காய்ச்சல் நோயை இயற்கை முறையில் நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அது தான் சரியான முறை என்பதும் அவர்களுக்கு தெரியும் இருந்தும் ஏன் அதை அவர்கள் செய்ய மறுக்கின்றனர்.


Siddha Hospital
Siddha Medical

இதை பற்றி நாம் மற்றொரு நாள் விரிவாக பேசலாம்.. இப்போது புற்றுநோய் அதிகமாக உருவாகி வந்துகொண்டிருக்கிறது இதை எப்படி குணமாக்குவது என்பதை நமது வைத்திய குடிலில் உங்களுக்கு முடிந்த வரையில் தொண்டு மனப்பான்மையோடு குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்துவருகின்றோம்.


மேலும் மஞ்சள் காமாலை நோய்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளித்து வருகின்றோம்.


உடனே எங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பரம்பரை சித்த மருத்துவர் திரு. டாக்டர் எஸ் மணிகண்டன் R.S.M.P அவர்களை நேரடியாக தொடர்பு (7904500905) கொண்டு பயன்பெற்று கொள்ளுங்கள்.

16 views0 comments

Comentários


bottom of page